BUILD YOUR LIFE WITH WISDOM (உங்கள் வாழ்வை ஞானத்தால் கட்டுங்கள்)
நீதிமொழிகள் 9 - 1 1. ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து, Wisdom hath builded her house, she hath hewn out her seven pillars: 2. தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி, She hath killed her beasts; she hath mingled her wine; she hath also furnished her table. 3. தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, She hath sent forth her maidens: she crieth upon the highest places of the city, 4. புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன். Whoso is simple, let him turn in hither: as for him that wanteth understanding, she saith to him, 5. நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள். Come, eat of my bread, and drink of the wine which I have mingled.
வேதம் தெளிவாக கூறுகிறது, ஞானம் தன் வீட்டைக் கட்டும்பொழுது தனது ஏழு தூண்களை சித்திரந்தீர்த்து (செதுக்கி, வண்ணமிட்டு) என்றும், மற்றும் ஒரு விருந்து பண்ணுவது என்பதும் ஒரு முழுமையைக் குறிக்கிறது. நாம் அனைவரும் ஒருவேளை நமக்கு வீட்டை கட்டுகிறோம், அதை செங்கல், சிமென்ட், கற்கள், கம்பிகள் போன்றவைகளை வைத்து கட்டுகிறோம், உறவினர்கள், நண்பர்களை அழைத்து விருந்து படைக்கிறோம், ஆனால் வேதம் இங்கே நாம் கட்டும் அந்த உலகப்பிரகாரமான வீட்டை குறிப்பிடவில்லை, நமது “வாழ்க்கை” என்ற வீட்டை எப்படிக் கட்டவேண்டும் அதனால் மற்றவர்கள் எப்படி பிரயோஜனப்படுத்தப் படுகிறார்கள் என்றும் நமக்கு என்ன பிரயோஜனம் என்றும் தெரிந்துகொள்ள அழைக்கப் படுகிறோம்.
இந்த வாழ்க்கையை “ஞானம்” என்ற ஆண்டவரின் அருட்கொடை மூலதனத்தின் மூலமாக அழகான தூண்களாக செதுக்கப்படும்போது எல்லாரும் பார்த்து வியக்கும் வீடாக மாறுகிறது மட்டுமல்ல ஒரு சரித்திரம் படைக்கும் வாழ்வாக மாறுகிறது. இந்த வீடு உங்களுக்கு வேண்டுமா? அல்லது உலக அறிவினால் இந்த உலகில் கிடைக்கும் மூலப்பொருள்களினால் கட்டும் பங்களா வீடு வேண்டுமா? நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். எவ்வளவுதான் பணம் செலவழித்தாலும், ஆண்டவர் அருளும் ஞானம் என்ற மூலப்பொருள் ஒன்றினால் கட்டும் வீடுதான் நிரந்தர வீடு மட்டுமல்ல, சந்தோசம், சமாதானம் மற்றும் மறுவாழ்வுவாகிய பரலோக வாழ்விற்கும் பயன்படும் என்பதை மறந்துபோகவேண்டாம் பிரியமானவர்களே.
ஆக உங்கள் வாழ்வை ஞானத்தின் மூலமாக கட்டவேண்டும் “BUILD YOUR LIFE WITH WISDOM” அருமையானவர்களே, உங்களின் தனிப்பட்ட ஜெபத்தில் இன்றுமுதல் நீங்கள் ஆண்டவரிடம் “Lord give me wisdom to fulfill the purpose of my life” ஆண்டவரே என்னுடைய வாழ்விலே எனக்காக வைத்திருக்கிற நோக்கத்தை காணும்படியாக அல்லது பெரும்படியாக எனக்கு ஞானத்தைத் தாருங்கள் என்று கேட்கவேண்டும். ஒருவேளை நாம் நமது உலக பாதுகாப்பு, செழிப்பு, சுகம் ஆகியவைகளுக்காக அநேகமாக தினமும் ஜெபிக்கிறோம், ஆனால் இந்த ஞானமாகிய வீட்டைக் கட்ட நாம் என்றைகாவது ஜெபிக்கிறோமா?.
இந்த ஞானம் எல்லாருக்கும் உரியது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். ஆகவேதான் இதை நாம் கடவுளிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளவேண்டும். We need God to give wisdom. வயதானால் நரைமுடி, வழுக்கைத்தலை போன்றவை தானாக வரும். ஆனால் ஞானம் தானாக வராது. ஒருவேளை 50, 70, 100 வயதானாலோ, Dr, Er, Phd, பல டிகிரிகள் A to Zவரை படித்தாலும் அறிவுதான் வளருமே ஒழிய ஞானம் வராது. Age and education is no guarantee of maturity (உலக ஞானம்) வயதும், படிப்பும் நமது உலக ஞானத்திற்கே(முதிர்ச்சி) உத்திரவாதம் அல்ல என்றபோது தெய்வீக ஞானத்திற்கு எப்படி சரியாகும். இந்த இரகசியத்தைத் தெரிந்தவர்கள் யார் என்றால் உண்மை கிருஸ்தவர்கள்(பெயரிலே கிருஸ்தவ பெயரை வைத்திருப்பவர்கள் அல்ல) . அதாவது வேதம் சொல்லுகிறது நீங்கள் ஞானத்தை வாஞ்சிக்க வேண்டும், கேட்க வேண்டும், விரும்ப வேண்டும் என்று. ஆமென்.
I. What is wisdom? - Knowledge – அறிவு, Wisdom – ஞானம்.
அறிவு வாழ்க்கையில் அனுபவத்தின் மூலமாக, படிப்பின் மூலமாக நாம் பெற்றுக் கொள்ளலாம். உண்மைதான் நாம் பல காரியங்களை படித்து அறிவு முதிர்ச்சி (maturity) பெற்றிருக்கிறோம். ஆனால் ஞானம் என்பது என்ன ? அது அறிவினின்று எப்படி வித்தியாசப்படுகிறது?.
Wisdom helps us to use the knowledge we have gained in the right way, at the right time, in the right place. ஞானம் நமக்கு எவ்விதமாக உதவுகிறது என்றால் நாம் பெற்ற அறிவை சரியான நேரத்திலே சரியான விதத்திலே சரியான இடத்தில் உபயோகப்படுத்தும் படியாக உதவுகிறது. அதாவது “Right decision, right time in the right place”
Knowledge is to learn something everyday. Wisdom is to remove something everyday.
உதாரணமாக: நாம் குடியிருக்கும் வீட்டை நமது கண்ணால் (naked eyes) பார்க்க முடியும். ஆனால் நமது வாழ்வாகிய வீட்டை நாம் உணரப்படும் போது அல்லது வெளிப்படும்போது (குணதிசயங்கள் மூலம்) மட்டுமே அதை அறிய முடியும். (You can feel it or sense it).
அதாவது அறிவு நமது இரண்டு கண்களால் காணமுடியும், ஞானம் மூன்றாவது கண் ஆகிய ஆவிக்குரிய கண்ணால் மட்டுமே உணர முடியும்.
அறிவு – கற்றுக்கொள்ள முடியும்
ஞானம் – பெற்றுக்கொள்ள முடியும்
God often used bitter experiences to make us better and strong. ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும், ஆண்டவர் பல நேரங்களில் கசப்பான அனுபவங்கள் மூலமாக நம்மை ஒரு சிறந்த அல்லது பெலமுள்ளவராக மாற்றலாம். ஆக கலங்கவோ பயப்படவோ வேண்டாம். “பயமும் கலக்கமும் தான் ஆண்டவருடைய பிள்ளைகளை எதிர்க்கும் சாத்தானின் முதல் ஆயுதம்”.
சரி, உதாரணமாக: In Advertisement – “cigarette smoking is injurious to health” என்று அதில் போடப்பட்டிருக்கும். இதைபிடித்தால் கான்சர், நுரையீரல் சம்பந்தமான வியாதிகள் வருமென்றும், அதின் பின் விளைவுகள் என்னவென்றும் அதைக் குடிப்பவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் அதைக் குடிக்க முற்படும்போது “அதைக் குடிக்க மாட்டேன்” என்று தனக்குள்ளே தீர்மானம் எடுப்பதுதான் ஞானம். He is having knowledge but lacks wisdom. இது நமது நடைமுறை வாழ்கை எல்லாவற்றிக்கும் பொருந்தும். ஆகவேதான் சாலமன் ஞானி நீதிமொழிகள் 4 -7 இல் கூறுகிறார் ...”ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி” என்று “YES get wisdom”. கிருஸ்தவர்கள் ஓன்றை தெரிந்து கொள்ளவேண்டும், வேத அறிவு வேறு, வேத ஞானம் என்பது வேறு. ஒருவேளை வேத வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கலாம், bible quiz, வேதாகம வகுப்புகள் போன்றவற்றில் பங்கு பெறுவது நல்லதுதான், ஆனால் தேவ ஞானத்தைப் பெற நாம் கடவுளிடம் கேட்டுத்தான் பெற்றுக் கொள்ளவேண்டும்.
Wisdom is the beginning for everything. ஒரு வயதான அம்மா எனது வீட்டில் பல வருடங்களுக்கு முன்பாக வாடகைக்கு இருந்தார்கள், அவர்களுக்கு கணவன் கிடையாது, ஒரே ஒரு மகன் மட்டுமே. அவர்கள் வேதத்தை பல தடவை படித்தவர்கள் என்று கேள்விப்பட்டேன். என்ன? எப்படி? படித்திருக்கிறீர்கள் என்றேன், அவர்கள் சொன்னது நம்மமுடியவில்லை, ஆம் நான் நிழலுக்குக் கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்கவில்லை என்றார்கள். ஆனால் என்ன ஆச்சரியம் பாருங்கள், ஆண்டவர் சிறிது சிறிதாக எனக்கு சொல்லிக் கொடுத்தார் என்பார்கள். அவர்களின் அந்த ஒரே மகன், ஒரு பேராயராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைக்கு அநேகருக்கு ஞானத்தைக் குறித்து தவறான பார்வை இருக்கிறது. ஒரு சிலருக்கு மட்டுமே ஆண்டவர் கொடுக்கும் வரம் இந்த ஞானம் என்றும், அவருக்கு ஆண்டவரால் விசேஷமாக கொடுக்கப்பட்டது என்றும் நினைக்கிறார்கள் அல்லது எங்களுக்கு மட்டும்தான் இது கொடுக்கப்படிருக்கிறது என்று தவறாக பரப்பப்படுகிறது. ஒரு சிலர் படித்தவர்களுக்கு மட்டுமே என்றும் நினைக்கின்றனர். பிரியமானவர்களே! இல்லை, படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், எல்லா ஜாதிக்காரர், சிகப்பு அல்லது கருப்பு, எல்லோருக்கும் ஞானம் கிடைக்கும் அல்லது பெற்றுக் கொள்ளலாம். கடையிலே காசு கொடுத்தால் கிடைப்பது ஞானம் அல்ல. அது விரும்பி கேட்கிற அனைவருக்கும் ஆண்டவர் கொடுப்பது. So, get wisdom.
பலர் அதனால்தான் தனக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்து சில காரியங்களை உலக ஞானத்தால் செய்து அதில் வெளிவரமுடியாமல் மாட்டிக் கொள்வார்கள். ஒருவேளை நாம் நினைக்காலாம் நான் நண்பர்களோடு டாஸ்மாக் கடைக்கு, பாருக்கு போகலாம் ஆனால் குடிக்கமாட்டேன் என்று நினைக்கலாம். வேண்டாம் அது தவறு, ஒருநாளில் மாட்டிக் கொள்ளுவீர்கள். எனவே அதை நடைமுறையில் செயல்படுத்த வேண்டும்.
முதலாவது உலக ஞானம் என்ன என்பதையும், இரண்டாவது தெய்வீக ஞானம் என்ன என்பதையும் அறிந்து கொள்ளலாலாம்.
உலக ஞானம்
- மனிதர் : கர்ம வீரர் காமராஜர் அவர்களை எடுத்துக் கொள்ளலாம்
- இதயத்தை பின்பற்ற வேண்டும்
- பார்த்து நம்பக்கூடியவை (believe which looks good)
- விரோதியை வெறுத்திடு, ஆனால் குடும்பத்தினரை, நண்பர்களை, தனது ஜாதி ஆட்களை மட்டும் நேசிக்க வேண்டும் என்பது.
- அநேக வழிகளில் கடவுளை அடையலாம்
- சுய கவுரவம், மதிப்பு, self esteem, சுயமரியாதை, self confidence, ஆகியவை மீது அதிக கவனம் வைப்பது.
தெய்வீக ஞானம்
- மனிதர் : சாலொமோன் ராஜாவை எடுத்துக் கொள்ளலாம்
- இருதயம் கேடுள்ளது, ஆக ஆவியைப் பின்பற்ற வேண்டும்.
- பார்க்காமல் விசுவாசிப்பது (அதிக பாக்கியவான்கள்)
- சத்துருவை, விரோதியை (எதிரியை) நேசிக்க வேண்டும்(அன்பு செய்ய வேண்டும்) அவர்களை ஆசிர்வதியுங்கள் என்பது
- இயேசுதான் ஒருவழி
- God confidence (in Christ faith) ஆண்டவரிடம் மரியாதையையும், கவுரவத்தையும் வைக்க வேண்டும்.
I இராஜாக்கள் 3 இல் சாலொமோனுக்கு ஆண்டவர் எப்படி இந்த ஞானத்தைக் கொடுத்தார் என்பதை நாம் அறிவோம்........
5. கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்.
In Gibeon the LORD appeared to Solomon in a dream by night: and God said, Ask what I shall give thee.
6. அதற்குச் சாலொமோன் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மன நேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர். And Solomon said, Thou hast showed unto thy servant David my father great mercy, according as he walked before thee in truth, and in righteousness, and in uprightness of heart with thee; and thou hast kept for him this great kindness, that thou hast given him a son to sit on his throne, as it is this day.
7. இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன். And now, O LORD my God, thou hast made thy servant king instead of David my father: and I am but a little child: I know not how to go out or come in.
8. நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன். And thy servant is in the midst of thy people which thou hast chosen, a great people, that cannot be numbered nor counted for multitude.
9. ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான். Give therefore thy servant an understanding heart to judge thy people, that I may discern between good and bad: for who is able to judge this thy so great a people?
தெய்வீக ஞானம் (மெய்ஞானம்) என்பதை வேதத்தில் யாக்கோபு 3 அதிகாரம் 13இல்,” உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். Who is a wise man and endued with knowledge among you? let him show out of a good conversation his works with meekness of wisdom”. திருவிவிலியம் இவ்வாறு கூறுகிறது .....உங்களிடையே ஞானமும் அறிவாற்றலும் உடையவர் யாராவது இருந்தால், ஞானம் தரும் பணிவாலும், நன்னடைத்தையாலும் அவற்றைக் காட்டட்டும்....
இன்றைக்கு நாம், இயேசுவே! எனக்கு எல்லா வழிகளிலும் தெய்வீக ஞானம் வேண்டும் எனவும், குடும்பத்தை நடத்த, ஊழியத்தை நடத்த, படிப்பில், வேளையில், தன்னிடத்தில் கொடுக்கப்பட்ட பிள்ளைகளை (சொந்த பிள்ளைகளானாலும், மாணவ, மாணவிகளானாலும் அவர்களை) சரியாக வழிநடத்த, வளர்க்க தெய்வீக ஞானம் வேண்டும் என்று கேட்க வேண்டும்.
நீங்கள் உங்கள் பிள்ளைகளை வளர்க்க முடியாது, ஆனால் அவர்களுக்கு வாழ்ந்து காட்ட வேண்டும். பன்றிகள், நாய்கள், பூனைகளும் குட்டிகளை வளர்க்கின்றன. ஆனால் நாம் வளர்ப்பது ஆண்டவரின் கைகளில் கொடுத்து ஞானத்தைப் பெற்று வளர்க்க வேண்டும். இந்த சமுதாயத்திற்கு உதவும் பிள்ளையாக வளர்க்க வேண்டும்.
I இராஜாக்கள் 3ம் அதிகாரத்தில் வசனம் 16 முதல் பார்ப்போம் என்றால், சாலொமோன் ராஜா ஞானமாய் சொன்ன தீர்ப்பைக் கண்ட, கேட்ட மக்கள் எல்லோரும் இது கடவுள் கொடுத்த ஞானம் என்பதைப் புரிந்து கொண்டார்களாம். மட்டுமல்ல பிரமித்தார்களாம்.
இன்று நமது கையிலே கொடுப்பபட்டுள்ள பிள்ளைகள், சக ஊழியர்கள், உடன் வேலை செய்பவர்கள், திருச்சபையார், அண்டை வீட்டார் நம்மிடம் இருக்கும் ஞானத்தைப் பார்ப்பது நமது செயல்கள், நடை, உடை, பாவனை, சொல் மூலமா, அல்லது நமது வெளி அலங்காரத்தின் மூலாமா? எது ஞானம்? சிந்திப்போமா.
உதரணமாக, நாம் வாழும் உலக வீட்டில் குப்பையும், அழுக்காகவும், ஒரு கெட்ட நாத்தமும், அசிங்கமான சூழல் கொண்ட தோற்றமும் இருக்குமானால் என்ன அர்த்தம், அது “சோம்பேறித்தனம்”. ஏழ்மை அல்ல, அது ஒரு மனப்பாங்கு மட்டுமே, இது பணம் அதிகம் இருப்பவரிடமும் கூட அநேகமாக காணப்படுகிறது, ஒருவீடு சுத்தமுடன் இருக்குமென்றால் அங்கே இருப்பவர்கள் மனதும் அப்படித்தான் இருக்கும். சிலர் சில நேரங்களில் மட்டும் சரி செய்வார்கள், ஆனால் பல நேரங்களில் அசிங்கமாகத்தான் இருக்கும். இது நடிப்பு. தூய்மை பரிசுத்ததிற்கு முதல் படி என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஆகவேதான் வேதம் சொல்லுகிறது “ஆண்டவரைத் தொழுது கொள்ளும்போது உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கவேண்டுமாம்”. ஒரு ராஜாதிராஜன் தங்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்.
II. Why we need wisdom? நமக்கு எதற்கு ஞானம் தேவை ?
இந்த உலகத்தில் ஒவ்வொரு நாளும் பல காரியங்கள் நமது பார்வைக்கு, உணர்வுகளுக்கு, இச்சைகளுக்கு, எண்ணங்களுக்கு நல்லதாக படுகிறது. உண்மையில் அது நல்லதாக இருக்கிறதா, நல்லதாக தெரிவது அல்ல நல்லதாக இருப்பது அவசியம். ஆக இந்த உண்மையான நிலவரத்தைப் புரிந்து கொள்ளுவதற்குத்தான் அல்லது தெரிந்து கொள்ளுவதற்குத்தான் ஞானம் தேவை.
ஆனால், அதே ஞானம் நமக்காக வைத்திருக்கிற ஆண்டவரின் வழிக்கு நேராக நம்மை திரும்பும்படியாக, மேலும் அனுதின வாழ்வில் நடக்கும்படியாக எடுக்கும் முயற்சிதான் தெய்வீக ஞானம் என்பது எனது பார்வை. கப்பலை திருப்பும் முயற்சி அதன் சுக்கானிடம் இருப்பதுபோல.
இதை நாம் வேதத்தின் மூலமாக தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்,
ஆபிரகாம் மற்றும் அவனது சகோதரன் மகன் லோத்து மூலம் தெரிந்து கொள்ளளலாம்.
ஆபிரகாம் : ஆண்டவர் இடத்தை தெரிந்து கொள் என்றவுடன் – கீழ்ப்படிகிறான். ஆண்டவரின் தெரிந்தடுத்தல். Gods leading- God opens all directions. ஆண்டவரின் ஆசிர்வாதத்தை பெறுகிறான்.
லோத்து : ஆதியாகமம் 13-10இல் தன கண்களை ஏறெடுத்துப்பார்த்து யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான்.......அவனது சொந்த புத்தியில் இடத்தைத் தெரிந்து கொள்கிறான். what felt good, or looks good. ஆண்டவரிடம் மனமடிவை பெறுகிறான்.
வெளிப்புற அழகைப் பார்த்து, நிறத்தைப் வைத்து, நிறைய பணம், பெரிய படிப்பு, நல்ல வேலை, பெரிய வீடு, கார்/பைக் போன்றவற்றைப் பார்த்து அநேகர் பல முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர். இங்கேதான் நாம் ஆபிரகாமைப் போல நாம் தேவ ஞானம் பெறவேண்டும். அநேக வாலிப பிள்ளைகள் தங்களின் எதிர்கால வாழ்வை ஆண்டவரிடமோ, அல்லது ஆண்டவர் கொடுத்த பெற்றோராகிய பெரியவர்களிடமோ கேட்காமல் அவர்கள் தானாக பல முடிவுகளை எடுக்கிறார்கள். அந்த தவறுகள் அவர்கள் பிள்ளைகளையும் தொடரும் என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். பவுல் கொரிந்து சபைக்கு கூறுகிறார் ...1 கொரிந்தியர் 7 – 27 இவ்வாறாக ......நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால் அவிழ்க்கப்பட வகை தேடாதே, நீ மனைவி இல்லாதிருந்தவனாக இருந்தால் மனைவியைத் தேடாதே .......பிரியமானவர்களே, தேவன் நமக்காக வைத்திருக்கிற வாழ்க்கைத் துணையை அல்லது வழியை தெரிந்தெடுக்க தேவ ஞானம் அதாவது மெய்ஞானம் தேவை, அதாவது ஆண்டவரின் உதவி தேவை. அருமையான வாலிப பிள்ளைகளே உங்கள் எதிர்கால வாழ்வை நீங்கள் சம்பூர்ணமாக மாற்ற ஆண்டவரிடம் ஞானத்தைக் கேட்கவேண்டும். சுயமுடிவு அநேக நேரங்களில் ஆபத்தைக் கொண்டுவரும். ஆனால் தேவ ஞானம் ஒருவேளை ஆரம்பம் அற்பமானதாக இருந்தாலும் முடிவு சம்பூர்ணமாக இருக்க வேண்டும். ஈசாக்கும், ரேபெக்காலும் இவ்விதமாக பெரியோர்களும் ஆண்டவரின் துணையுடன் திருமணம் செய்து ஆசிர்வதிக்கப்பட்டதை நாம் வேதத்தில் பார்க்கலாம்.
சம்பவம்: ஒரு நண்பர் ஒருவர் ஒரு திருமணத்தின் போது என்னிடம் கேட்டது ஞாபகத்திற்கு வருகிறது, ஒரு திருமணத்தைக் பார்க்கும் போது “மிகவும் பொருத்தமானது” என்று எதைக் கூறுகிறோம் என்றரர். ஒருவேளை “அதன் பொண்ணும், மாப்பிளையும்” என்றேன். ஆம், ஆனால் இதைப்போல நான் மற்றும் அங்கிருந்த அனைவரும் ஒரு ஏழு வருடங்களுக்கு முன்பாக ஒரு பெண்ணையும் அந்த மாப்பிளையையும் மிகவும் பொருத்தமான ஜோடி என்றோம். ஆனால் இன்று உண்மையான நிலை என்னவென்றால் ஒரு பிள்ளை பிறந்தபிறகும் இருவரும் பிரிந்து வேறு வேறு திருமணம் செய்து தனியாக இருக்கிறார்கள் என்றார். அந்தோ பரிதாபம்....பெரியோர்களும் பல நேரங்களில் ஆண்டவரின் ஞானத்தைக் கேட்பது இல்லை.
III. How to get Godly wisdom? தெய்வீக ஞானத்தை நாம் எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும்?
முதலாவதாக ஆண்டவராகிய இயேசுவிடம் வரவேண்டும். First, Come to Jesus. வந்தபின் .....
- இயேசுவாகிய ஆண்டவருக்கு பயப்படவேண்டும்/கீழ்ப்படியவேண்டும் அப்பொழுது நாம் தெய்வீக ஞானத்தை பெறலாம் .
Jesus is wisdom, so give your life to Him. He is the source(மூலாதாரம்). இயேசுதான் சகல ஞானத்தின் ஊற்று. ஆக கடவுள் பயம் இருந்தால் மற்ற உலக காரியங்களுக்கு பயப்பட மாட்டோம். வேதம் கூறுகிறது ...நீதிமொழிகள் 9-10—கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்....இதை எசாயா தீர்க்கதரிசி 11 – 3இல் கூறுகிறார் ....ஒரு துளிர் தோன்றி ...என்று (He is the beginning- in Hebrew-wisdom (எபிரேய மொழியில் இதற்கு ஞானம் என்று அர்த்தம். இதை நீதிமொழிகள் 14-16, 14- 26 & 27, 15—33 ஆகியவற்றிலும் பார்க்கலாம். யோபு 28-28இல் யோபு, சக “மனுஷனை நோக்கி, இதோ ஆண்டவருக்கு பயப்படுவதே ஞானம், பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி” என்று கூறுகிறார். நீதிமொழிகள் இரண்டாம் அதிகாரத்தை வாசித்தீர்கள் என்றால் 10 முதல் 19 வரை ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து .....கடைசியிலே “ஞானத்திலே ஆண்டவரின் பாதுகாப்பு (safety) மற்றும் வேசியிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்கிறார்.
நாம் பெற்றுக் கொண்ட உலக அறிவை வெற்றிகரமாக பயன் படுத்துவது ஞானம். பயப்படுவதென்றால் ...பயபக்தியுடன், கீழ்படிதலுடன், மரியாதையுடன், நம்பிக்கையுடன், ஆண்டவர் எப்பொழுதும் நமது செயல்களைப் பார்க்கிறார் என்ற உணர்வோடு காரியங்களை செய்வது, . கடவுளின் சித்தம், திட்டம், வழிகளைப் பின்பற்றி அதற்கேற்ப நடப்பது. ‘’நீதிமொழிகள் 31 – 30 இவ்வாறாக கூறுகிறது ....செளந்தரியம், வஞ்சனையுள்ளது, அழகும் வீண் – கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரியே புகழப்படுவாள்”.
கர்த்தருக்குப் பயப்படும் மனுஷன் எப்படி இருப்பான் தெரியுமா?
- அந்தரங்க வாழ்வில் தூய்மை
- பேச்சு, பார்வை, நடக்கையில் – தூய்மை
- சூழ்நிலையில் தூய்மை – ie. யோசேப்பு , தானியேல்
- தீமையை வெறுப்பது ...
இதை மேற்கொள்ள ஆண்டவர் யோவான் 14 – 27இல் நமக்கு தைரியப்படுத்த சொன்ன வார்த்தை : ......சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன் ........உங்கள் இருதயம் கலங்காமலும், பயப்படாமலும், இருப்பதாக என்று கூறுகிறார்.
தேவபயம் இருக்கவேண்டிய இடங்கள் / காரியங்கள் :
- ஆராதனையில்
- நம் கண் பார்வையில்
- ஒருவரோடு ஒருவர் பேசும்போது (மாற்று பாலினர்)
- செய்யும் வேளையில்/ஊழியத்தில்
- சிந்தனையில்
- வசனத்திற்கு
- பரிசுத்தமாக்குதலில்
- இரட்சிப்பு நிறைவேறுதலில்’
2. இரண்டாவதாக ........மனத்தாழ்மையோடும், அடக்கத்தோடும் இருக்கும்போது நாம் தெய்வீக ஞானத்தைப் பெற முடியும்:
நீதிமொழிகள் 11 – 2 “அகந்தை வந்தால் இலச்சை வரும், தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு”.
நீதிமொழிகள் 15 – 33 “கர்த்தருக்கு பயப்படுதல் ஞானத்தை போதிக்கும், மேன்மைக்கு முன்னானது தாழ்மை”.
யாக்கோபு 4 – 6 தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
அருமையானவர்களே, மனத்தாழ்மையை அநேகர் பலவீனமாக நினைக்கின்றனர், ஆனால் அதுவே ஆண்டவரின் பார்வையில் பலம் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
வேதத்தில், தேவாலயத்தில் ஜெபம் செய்த இருவர் பற்றி ஆண்டவர் கூறியது :
பரிசேயன் : அகந்தையான பேச்சு, தற்பெருமை
ஆயக்காரன் : நான் பாவி என்று தாழ்த்துகிறான். ஆக இவனின் ஜெபம் கேட்கப்படுகிறது. லூக்கா 18 – 14 “தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப் படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்”.
ஆண்டவர் இயேசுவே தாழ்மைக்கு உதாரணம். இதை நாம் பிலிப்பியர் 2 – 6 முதல் 8 “ அவர் தேவனுடைய ரூபாமாயிருந்தும் ..............தம்மைத் தாமே தாழ்த்தினார்”.
1 பேதுரு 5 -5 பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
தானியேல் 2 – 17 முதல் 23 வரை நாம் பார்க்கும்போது தானியேலின் மனத்தாழ்மை மற்றும் அவர்கள் முற்றிலும் தேவனைச் சார்த்து இருந்தார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
கலாத்தியர் 6 – 14 நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டாதிரும்பேனாக, அவரால் உலகம் எனக்கு சிலுவையிலறையுண்டிருக்கிறது. நானும் உலகத்திற்கு சிலுவையிலரையப்பட்டிருகிறேன்” என்று பவுல் சொல்லுகிறார் .
தாழ்மையைப் பற்றி சிலுவை நமக்கு கற்றுத் தரவேண்டும்.
ஒரு இலங்கையை சேர்ந்த ஒரு பெருமையுள்ள தேவ ஊழியர் என்று சொல்லப்பட்டவர் கண்ட தரிசனம் : பரலோகம் செல்ல வழி – 7 படிக்கட்டுகள் இருந்தனவாம், ஒவ்வொன்றாய் ஏறும்போது “எல்லாவற்றிலும் “தாழ்மை” என்றிருந்ததாம்.
நாம் ராஜாதிராஜனின் பிள்ளைகள். ஆக, தாழ்வு மனப்பான்மைக்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது, ஆனால் தாழ்மையுடன் இருக்க வேண்டும்.
1 பேதுரு 3 – 4 :மனித உள்ளத்தில் மறைந்திருக்கிற பண்புகளாகிய பணிவும், அமைதியுமே, உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருப்பதாக.....அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும், அமைதலுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக் கடவது” அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பட்டது.
நீதிமொழிகள் 2 :1 முதல் 6 வரை ...தாழ்மைக்கும் கர்த்தருக்கு பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.
- கடவுளுடைய வார்த்தையை தியானிப்பதன் மூலம் நாம் தெய்வீக ஞானம் பெறலாம்:
எப்படி பெறலாம் ....புதையலைப் போல ... நீதிமொழிகள் 2 : 1 முதல் 6 வரை ...என் மகனே நீ உன் செவியை ஞானத்திற்கு சாய்த்து ........நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி ........கர்த்தர் ஞானத்தைத் தருகிறார், அவர் வாயினின்று அறிவும், புத்தியும் வரும்”.
ஏசாயா 40 – 8 நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்.
இந்த உலகத்தில் நிலை நிற்கக் கூடிய ஓன்று கர்த்தருடைய வசனம் மாத்திரமே. ”பொதுவாக தேவன் தம்முடைய ஜனங்களுக்கு அவருடைய வார்த்தை மூலமாகவே அவரை வெளிப்படுத்துகிறார்”. ஆகவே நம்முடைய வாழ்வில் கர்த்தருடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டு வாழுவோமேன்றால், நாமும் நிலைத்திருப்போம் என்பது உண்மையே.
ஏசாயா 55 – 11 வாக்குப் பண்ணினதை நிறைவேற்றுகிற தேவன் அவர் – அது மாத்திரமல்ல அவர் வாயினின்று புறப்படுகிற வசனம் வெறுமையாக திரும்பாது. ஆகவேதான் இயேசுவானவர் சொன்னார் “வானமும் பூமியும் ஓழிந்து போனாலும் என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை என்று மத்தேயு 24-35, மாற்கு 13-31 ஆகியவற்றில் இதை நாம் பார்க்கலாம். ஆண்டவருடைய வேதத்தில் எழுத்தப்பட்ட வார்த்தைகளாகிய இரட்சிப்பின் செய்தி ஒரு பாவியை பாதாளத்திற்கு செல்லவிடாமல் அவனை பரிசுத்தனாய் மாற்றி பரலோகத்திற்கு செல்லும் பாதையைக் காட்டும் தீபமாய் விளங்குகிறது. இதை யாரெல்லாம் விசுவாசித்து அதன்மூலம் இரட்சிப்பு (மீட்பு) பெறுகிறார்களோ அவர்கள்தான் கிருஸ்தவர்கள். ஆமென் .... இந்த உலகத்தில் நமக்கு கொடுக்கப்பட்ட விலையேறப்பெற்ற ஒரு பொக்கிஷம் கர்த்தருடைய வார்த்தைகள். இந்த வார்த்தைகளை வைத்து நாம் எதையும் சாதிக்கலாம் ...பிசாசை வெற்றிபெறலாம். அதற்கு ஆண்டவர் இயேசு இந்த உலககில் மனிதனாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது நாற்பது நாள் உபவாசத்திற்கு பிறகு, பிசாசு ஆண்டவருக்கும் கூட மூன்று சோதனைகளைக் கொண்டு வந்தான், ஆனால் அவற்றை அவர் வேத வார்த்தைகள் மூலமே வெற்றி பெற்றார் என்பதை நாம் தெரிந்து கொண்டு அவற்றை நாமும் செயல்படுத்தும் போது நமக்கும் பிசாசிடமிருந்து வெற்றி நிச்சயம் கிடைக்கும். ஆமென்....
“ஒரு வாலிபன் தன் வாலிப காலத்தில் வேதத்தை சுமந்தால், வயதான பிறகு அந்த வேதம் அவனை சுமக்கும்” என்று ஒரு பக்தன் கூறினார்.
வேத வார்த்தைகள் ஆத்துமாவை உயிற்பிக்கிறது மாத்திரமல்ல, தேவசாயலில் உங்களை மருரூபமாக்குகிறது.
கர்த்தருடைய வார்த்தை என்பது என்ன? உம்முடைய வார்த்தைகள்
- தேவனே அந்த வார்த்தை – யோவான் 1-1
- ஜீவனுள்ளது – எபிரெயர் 4-12
- வல்லமையுள்ளது – எபிரெயர் 4-12
- இருபுறமும் கருக்குள்ள பட்டயம் – எபிரெயர் 4-12
- ஒரு கண்ணாடி – யாக்கோபு 1: 22-25
- ஆவிக்குரிய பட்டயம் – எபேசியர் 6-17
- கிருபையுள்ள வார்த்தைகள் – லூக்கா 4-22
யோவான் 17:17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
சங்கீதம் 119:103 உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.
எரேமியா 15:16 உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய
கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.
அன்பானவர்களே, இந்த ஆண்டவரின் வார்த்தைகளை தியானிப்பதை நாம் பழகியிருக்கிறோமா?
1 பேதுரு 2-3 ....திருவசனமாகிய கலங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்.
முக்கியமாக யாக்கோபு 1-22...ன் படி ....திருவசனத்தை கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள் ...இதுவே உண்மையான தியானம்.
ஆண்டவருடைய வார்த்தைகளை நாம் தாவீதைப் போல, சலோமொனைப் போல நாம் பிடித்துக் கொண்டால் பரத்திலிருந்து வரும் ஞானம் நமக்கும் கிடைக்கும்.
அவருடைய கிருபையுள்ள வார்த்தைகளை நாம் நம்பி, விசுவாசித்து செயல்படும்போது ஆவியானவருடைய கிருபை உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நீங்கள் கையிட்டு செய்கிற எல்லா உலக வேலைகளிலும் ஆண்டவர் ஆசிவதிப்பார் ....முக்கியமாக ஆண்டவர் ஆசிரியர்களுக்கு இதை மேலும் இரண்டு மடங்கு விதமாக ஆசிர்வதிப்பார் “உங்கள் கையில் ஆண்டவர் கொடுத்திருக்கிற பிள்ளைகளை (மாணவ மாணவிகளை) உங்கள் மூலம் ஆசிர்வதிப்பார்”.
- கடைசியாக .... விசுவாசத்தோடு கூடிய ஜெபம் : (இதை பரிசுத்த ஆவியால் நிறைந்த ஜெபம் என்றும் எடுத்துக் கொள்ளாலாம்)
பரிசுத்த ஆவியானவருக்கு இன்னொரு பெயர் “கிருபையின் ஆவி” எபிரெயர் 10-29.
யாக்கோபு 1 -5 & 6யில் “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறையுள்ளவனாயிருந்தால் யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக் கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக் கடவன்...............ரோமர் 12 – 12 (கடைசிபகுதி) ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள்>
ஜெபம் தேவ ஐக்கியத்தை உணருகிற நேரம். நம் உள்ள உணர்வுகளை மறைக்காமல் கர்த்தருக்கு காண்பிக்கிற ஒரு செயல்தான் ஜெபம். நாம் ஜெபிக்கும்போது இருதயத்தில் இயேசுவின் தொடுதலையும், ஐக்கியத்தையும் தொடர்புள்ள ஒரு உறவை நாம் உணரும்போதுதான் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் கிரியை செய்கிறார்.
ஜெபம் தேவனை மகிமைப் படுத்துவதாகவும், பிரியப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். அவரைப் பிரியப்படுத்தும் போது நமக்கு தனிமையில்லை, சோர்வு இல்லை, துக்கம் இல்லை அதற்க்கு மாறாக பரிசுத்தம் அதிகரிக்கும், சமாதானம் பெருகும், பாவ எண்ணங்கள் அதன் சுபாவம், சுவடுகள் மறையும்.
பல தரப்பட்ட ஜெபங்களை நாம் பார்க்கலாம்: அழுது ஜெபம் செய்வது அல்லது கண்ணீரின் ஜெபம், உபவாச ஜெபம், போராடி ஜெபம் செய்வது, தனித்து ஜெபம் செய்வது ......ஓசியா 12: 3 & 4...”யாக்கோபு தன பெலத்தினாலே தேவனோடு போராடினான், அழுது அவரைக் கெஞ்சினான்”.. பிறகு அன்னாளின் ஜெபம், யாபேசின் ஜெபம், யோபின் ஜெபம், தாவீதின் ஜெபம், ஆண்டவர் இயேசு கெத்செமேனே தோட்டத்தில் செய்த ஜெபம் போன்றவற்றை நாம் வேதத்தில் பாரக்கலாம். ரோமர் 8- 26 ஜெபத்திலே உங்களுடைய பெலவீனங்களில் உதவி செய்கிறவர் பரிசுத்த ஆவியானவர்” என்று கூறுகிறார் பவுல்....
நம் தேவன் பதில் கொடுக்கும் தேவன், உத்தரவு அளிக்கிறார், தாங்குகிறார், சுமப்பார், தப்புவிப்பார், விடுதலை அளிப்பார் முக்கியமாக சமாதானம், சந்தோசம் தருவார்.
சகரியா 4- 6 பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
அப்போஸ்தலர் 1- 8 பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும் ........சாட்சிகளாய் இருப்பீர்களாக ........ 2 கொரிந்தியர் 7 – 17 கர்த்தரே ஆவியானவர் கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு....
அருமையானவர்களே தெய்வீக ஞானம் பெற பரிசுத்தஆவியானவரின் உதவி தேவை. ஆக ஆவியில் ஜெபம் செய்ய உங்களை முழுவதும் ஒப்படைக்க வேண்டும்.
சரி இந்த நான்கு காரியங்களை நம்முடைய பிள்ளைகளுக்கு (அல்லது நம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு) இந்த தெய்வீக ஞானத்தைப் பெற நாம் பழக்குவிக்க வேண்டும். அது எப்படி? ....”Parents are the role models for their children”. You are the first Hero and Heroine of your children”…. நீங்கள் செய்வதை உங்கள் பிள்ளைகளும் செய்வார்கள். ஆமென்.
கதை : ஒரு இரண்டாம் வகுப்பு கணக்கு ஆசிரியர், தனது மாணவர்களிடம் இன்றைக்கு ஓன்று, இரண்டு, மூன்று, சொல்லிக் கொடுக்கப் போகிறேன் என்றாராம். சரி தெரிந்தவர்கள் சொல்லுங்கள் என்றதும், சிலர் 1,2,3, சிலர் 4,5,6 சிலர் 8,9, 10 அதற்கப்புறம் என்றதும் ஒரு மாணவன் சொன்னானாம் ass, king, queen (சீட்டு விளையாட்டு) என்றானாம். இது வீட்டில் அந்தப் பிள்ளைக்கு அவனது தாய் அல்லது தகப்பன் சொன்னதை அல்லது செய்ததை அவன் செய்கிறான். அருமையானவர்களே, நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும், நமது பிள்ளைகள் செய்யவேண்டியதை நாம் முதலில் செய்ய வேண்டும், அதைப் பார்த்துதான் அவர்கள் பழகுவார்கள். நீங்கள் சிகரெட் பிடிப்பவர்கள் என்றால் உங்கள் பிள்ளைகளும் செய்வார்கள். நீங்கள் வேதத்திற்கு, ஜெபத்திற்கு முக்கியத்துவம் குடிப்பீர்கள் என்றால் அவர்களும் குடுப்பார்கள். அதுபோல மற்ற காரியங்களும்.
ஆக நாம் இதை நமது பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும், அப்படியென்றால் நாம் முதலில் வேதம் வாசிப்பது, ஜெபம் செய்வது, பாடல்கள் பாடிவது, ஆண்டவரைத் துதிப்பது என்பவைகளில் ஒழுங்கும் கிரமமாக செய்யப் பழக்கவேண்டும். அப்பொழுது ஆண்டவர் அருளும் தெய்வீக ஞானம் நமக்கும் நமது குடும்பத்தினருக்கும் நமது மாணவ மாணவிகளுக்கும் கிடைக்கும்.
கடைசியாக : யாக்கோபு 3 – 17 இவ்வாறாக கூறுகிறது .......”பரத்திலிருந்து வரும் ஞானம் (மெய் ஞானம்) எப்படிப்பட்டதாக இருக்குமாம்:
- சுத்தமுள்ளது
- சமாதானமுள்ளது
- சாந்தமானது
- இணக்கமானது
- இரக்கமுள்ளது
- நற்கனிகள் நிறைந்தது
- பட்ச பாத மில்லாதது (நடுநிலை)
- வெளி வேஷம் இல்லாதது
நீதிமொழிகள் 8:11 முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத் தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல.
நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் எதைத் தேடி வைத்திருக்கிறோம். ஆண்டவரின் ஞானத்தை பெறும் போது இந்த உலகின் எல்லா சம்பத்தும் வந்து சேரும். இதுதான் கிருஸ்தவ இரகசியம்.
இயேசுவானவர் இந்த உலகில் இருக்கும்போது எப்படி வளர்ந்தாராம் லூக்கா 2-52..சொல்லுகிறது ....”.இயேசு வானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுசர் தயவிலும் அதிக அதிகமாய் விருத்தியடைந்தார்”.
வேதம் தெளிவாக சொல்லுகிறது. ...
மத்தேயு6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
பிலிப்பியர் 4:19 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்
ஆமென் ...
நன்றி
பால் சுரேஷ்குமார், பசுமலை